3வது போட்டியிலும் தோல்வி. தொடரை இழந்தது இந்திய அணி
Australia v India - Game 3
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான மூன்றாவது ஒருநாள் போட்டியிலும் இந்திய அணி தோல்வி அடைந்ததால் தொடரையும் பரிதாபமாக இழந்தது.

ஏற்கனவே இரண்டு ஒருநாள் போட்டிகளில் தோல்வி அடைந்த இந்திய அணி நேற்று மெல்போர்னில் மூன்றாவது ஒருநாள் போட்டியில் மோதியது. டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி முதலில் பந்துவீசியது.

முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி விராத்கோஹ்லியின் அற்புதமான சதத்துடன் 50 ஓவர்களில் 6 விக்கெட்டுக்களை இழந்து 295 ரன்கள் எடுத்தது. விராத் கோஹ்லி 117 ரன்களும், தவான் 68 ரன்களும், ரஹானே 50 ரன்களும் எடுத்தனர்.

296 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய ஆஸ்திரேலிய அணி 48.5 ஓவர்களில் 7 விக்கெட் இழப்பிற்கு 296 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றதோடு தொடரையும் கைப்பற்றியது. மாக்ஸ்வெல் 96 ரன்களும், மார்ஷ் 62 ரன்களும் எடுத்தனர்.

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *