shadow

6T20  உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான கடைசி லீக் ஆட்டத்திலும் இந்திய அணி அதிரடி வெற்றி பெற்றது.

நேற்று மிர்புரில் நடந்த ஆட்டத்தில் இந்தியாவும், ஆஸ்திரேலியாவும்  மோதின . டாஸ் வென்ற ஆஸ்திரேலிய கேப்டன் ஜார்ஜ் பெய்லி இந்தியாவை பேட் செய்யுமாறு அழைத்தார்.

முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி, யுவராஜ்சிங், மற்றும் தோனியின் அதிரடி ஆட்டத்தினால் 7 விக்கெட் இழப்பிற்கு 159 ரன்கள் குவித்தது. யுவராஜ்சிங் 60 ரன்களும், கேப்டன் தோனி  24 ரன்களும் எடுத்தனர்.

160 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிய இலக்குடன் கம்பீரமாக களமிறங்கிய ஆஸ்திரேலியாவை இந்திய சுழற்பந்து வீச்சாளர் அஸ்வின் துவம்சம் செய்தார். அவர்  3.2 ஓவர்கள் வீசி 11 ரன்களை மட்டுமே கொடுத்து ஆஸ்திரேலிய அணியின் 4 முக்கிய விக்கெட்டுக்களை கைப்பற்றினார். இறுதியில் ஆஸ்திரேலிய அணி 16.2 ஓவர்களுக்கு 86 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்து பரிதாப தோல்வி அடைந்தது. அஸ்வின் ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார்.

ஸ்கோர் போர்டு

இந்தியா

ரோகித் ஷர்மா (சி)முயர்ஹெட்    (பி) ஹாட்ஜ் 5

ரஹானே (சி) ஹேடின்    (பி) போலிஞ்சர் 19

கோலி (சி) ஒயிட் பி)முயர்ஹெட்    23

யுவராஜ்சிங் (சி) மேக்ஸ்வெல்    (பி) வாட்சன் 60

ரெய்னா (சி) பிஞ்ச்    (பி) மேக்ஸ்வெல் 6

டோனி (பி) ஸ்டார்க்    24

ஜடேஜா (ரன்–அவுட்)    3

அஸ்வின் (நாட்–அவுட்)    2

புவனேஷ்வர்குமார் (நாட்–அவுட்)    0

எக்ஸ்டிரா    17

மொத்தம் (20 ஓவர்களில்    7 விக்கெட்டுக்கு) 159

 

ஆஸ்திரேலியா

ஆரோன் பிஞ்ச் (சி) கோலி    (பி) அஸ்வின் 6

வார்னர் (சி) ரோகித் (பி)    அஸ்வின் 19

ஒயிட் (சி) ஜடேஜா (பி)    புவனேஸ்வர் 0

வாட்சன் (பி) மொகித் ஷர்மா    1

மேக்ஸ்வெல் (பி) அஸ்வின்    23

பெய்லி (சி) கோலி (பி)    ஜடேஜா 8

ஹாட்ஜ் (சி) ஜடேஜா (பி)    மிஸ்ரா 13

ஹேடின் (சி) ரஹானே (பி)    மிஸ்ரா 6

மிட்செல் ஸ்டார்க் (ரன்–அவுட்)    2

முயர்ஹெட் (சி) டோனி (பி)    அஸ்வின் 3

போலிஞ்சர் (நாட்–அவுட்)    1

எக்ஸ்டிர     4

மொத்தம் (16.2 ஓவர்களில் ஆல்–அவுட்) 86

 

Leave a Reply