shadow

விராத் கோஹ்லிக்கு கிடைத்த முதல் மோசமான தோல்வி

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் கிரிக்கெட் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 333 ரன்கள் வித்தியாசத்தில் படுதோல்வி அடைந்துள்ளது.

டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலியா அணி 260 ரன்கள் எடுத்தது. இதனையடுத்து பேட்டிங் செய்த இந்திய அணி 105 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுக்களையும் பரிதாபமாக இழந்தது.

155 ரன்கள் முன்னிலை பெற்ற ஆஸ்திரேலியா அணி, இரண்டாவது இன்னிங்ஸில் 285 ரன்கள் குவித்தது. இதனால் இந்திய அணி வெற்றி பெற 441 ரன்கள் இலக்காக நிர்ணயம் செய்யப்பட்டது. ஆனால் இந்திய அணி, ஆஸ்திரேலிய பந்துவீச்சாளர்களின் அபார பந்துவீச்சை தாக்குபிடிக்க முடியாமல் 107 ரன்களுக்கு ஆட்டமிழந்ததால் 333 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது.

இந்த வெற்றியின் மூலம் ஆஸ்திரேலிய அணி 1-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றுள்ளது.

Leave a Reply