shadow

இலங்கைக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் ஆஸ்திரேலியா அபாரம்

CRICKET-SRI-AUSஇலங்கையில் சுற்றுப்பயணம் செய்து வரும் ஆஸ்திரேலிய அணிக்கு மூன்று டெஸ்ட் போட்டியிலும் தோல்வியே கிடைத்த நிலையில் நேற்று இரு அணிகளுக்கும் இடையேயான ஒருநாள் போட்டி தொடங்கியது. டெஸ்ட் போட்டியை போலவே ஒருநாள் போட்டியிலும் இலங்கை ஆதிக்கம் செலுத்தும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் ஆஸ்திரேலிய அணி அபாரமாக விளையாடி வெற்றி பெற்றது.

டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி முதலில் பந்து வீச முடிவு செய்தது. இதனால் முதலில் பேட்டிங் செய்த இலங்கை அணிக்கு ஆரம்பமே அதிர்ச்சி காத்திருந்தது. தொடக்க ஆட்டக்காரர் பெரரா முதல் ஓவரிலேயே அவுட் ஆனால் இருபினும் மெண்டிச் மற்றும் சண்டிமால் பொறுப்புடன் விளையாடியதால் ஸ்கோர் 227க்கு உயர்ந்தது.

228 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி களமிரங்கிய ஆஸ்திரேலியா 46.4 ஓவர்களில் 228 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம் ஆஸ்திரேலியா 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கின்றதூ.

Leave a Reply