shadow

கஞ்சா வளர்க்க விவசாயிகளுக்கு லைசென்ஸ் கொடுக்கும் நாடு
cannabis-australia-_x23h
இந்தியா உள்பட பல ஆசிய நாடுகளில் தடை செய்யப்பட்ட செடியான கஞ்சா செடியை விவசாயம் செய்ய ஆஸ்திரேலியா நாடு விவசாயிகளுக்கு அனுமதி அளித்துள்ளது. ஆனால் விளைவிக்கப்படும் கஞ்சா செடியை மருத்துவத்திற்கு மட்டுமே பயன்படுத்த வேண்டும் என்ற உத்தரவையும் அந்நாட்டு அரசு பிறப்பித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

ஆஸ்திரேலியாவில் chemotherapy சிகிச்சைக்காக நோயாளிகளுக்கு கஞ்சா கொடுக்கப்படும் வழக்கம் உள்ளது. ஆனால் இந்த கஞ்சா கிடைப்பது மிக அரிதாக இருப்பதால் மருத்துவர்களும் நோயாளிகளும் சிரமங்களை எதிர்கொள்வதை அடுத்து சட்டபூர்வமாக கஞ்சா விளைவிக்க ஒருசில விவசாயிகளுக்கு ஆஸ்திரேலிய அரசு லைசென்ஸ் கொடுத்துள்ளது.

கஞ்சா விளைவிக்கப்படும் நிலத்திற்கு பாதுகாப்பு கொடுக்க வேண்டும் என்றும் கண்டிப்பாக மருத்துவம் தவிர வேறு எதற்கும் இந்த செடிகளை பயன்படுத்த கூடாது என்றும் அந்நாட்டு அரசு கண்டிப்பாக உத்தரவிட்டுள்ளது.

Leave a Reply