shadow

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான போட்டியில் 290 ரன்களை குவித்த டெய்லர். முழு விபரம்

taylorஇந்தியா மற்றும் தென்னாப்பிரிக்கா அணிகளுக்கு இடையேயான 2வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியின் 2வது மற்றும் 3வது நாள் ஆட்டம் மழை காரணமாக ரத்து செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் பெர்த் நகரில் நடைபெற்று வரும் ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் டெஸ்ட் கிரிக்கெட் போட்டி தற்போது விறுவிறுப்பான இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது.,

கடந்த 13ஆம் தேதி ஆரம்பமான இந்த போட்டி இன்றுடன் முடிவடையவுள்ளது. ஆஸ்திரேலியா அணி முதல் இன்னிங்ஸில் 559 ரன்கள் குவித்திருந்தது. வார்னர் 253 ரன்களும், காவ்ஜா 121 ரன்களும் குவித்தனர்.

இதற்கு பதிலடி கொடுத்த நியூசிலாந்து அணி முதல் இன்னிங்ஸில் 624 ரன்கள் அடுத்து ஆஸ்திரேலியாவுக்கு அதிர்ச்சி கொடுத்தது. டெய்லர் 290 ரன்களும், வில்லியம்சன் 166 ரன்களும் எடுத்தனர்.

இந்நிலையில் 2வது இன்னிங்ஸை தொடங்கிய ஆஸ்திரேலியா, 63 ஓவர்களில் 2 விக்கெட் இழப்பிற்கு 258 ரன்கள் எடுத்துள்ளது. ஸ்மித் 131 ரன்களுடனும், வோக்ஸ் 101 ரன்களுடனும் ஆட்டமிழக்காமல் உள்ளனர். இன்று இறுதி நாள் என்பதால் இந்த ஆட்டம் டிராவில் முடியும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Leave a Reply