shadow

மியான்மரில் அதிபர் தேர்தல். ஆங் சான் சூகி ஆதரவாளர் வெற்றி
aung
மியான்மர் நாட்டில் சமீபத்தில் நடந்த அதிபர் தேர்தலி ஆங் சான் சூகியின் ஜனநாயக தேசிய கட்சி வெற்றி பெற்ற நிலையில் தற்போது புதிய அதிபரை தேர்வு செய்வதற்கான வாக்கெடுப்பு அந்நாட்டின் பாராளுமன்றத்தில் நடந்து வருகிறது. இந்த தேர்தலில் ஆன் சான் சூகியின் ஆதரவு வேட்பாளர் வெற்றி பெறுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

மியான்மரில் ராணுவ ஆட்சி முடிவுக்கு வந்து கடந்த நவம்பர் 8ஆம் தேதி ஜனநாயக ரீதியான பாராளுமன்ற தேர்தல் நடந்தது. இந்த தேர்தலில் ஆங் சான் சூகியின் ஜனநாய தேசிய கட்சி (என்.எல்.டி.) இரண்டு சபைகளிலும் 80 சதவீதத்துக்கும் அதிகமான இடங்களில் வெற்றி பெற்றது. இருப்பினும் கடந்த ஐந்து மாதங்களாக அதிபர் யார்? என்பதை தேர்வு செய்யும் தேர்தல் நடைபெறாமல் இருந்த நிலையில் தற்போது அந்த தேர்தல் நடைபெறுகிறாது. தற்போதைய அதிபரின் பதவிக் காலம் மார்ச் 31ஆம் தேதியுடன் முடிவடைவதால் புதிய அதிபர் வரும் ஏப்ரல் 1ஆம் தேதிக்குள் பதவி ஏற்க வேண்டும். மியான்மர் சட்டப்படி அதிபரை எம்.பி.க்கள் மட்டுமே தேர்வு செய்ய முடியும்.

ஆன் சாங் சூகியின் கட்சி பெருவாரியான வித்தியாசத்தில் வெற்றி பெற்றாலும் அவருடைய கணவர் வெளிநாட்டை சேர்ந்தவர் என்பதாலும், அவருடைய இரண்டு மகன்களும் வெளிநாட்டில் இருப்பதாலும் அவரால் அதிபராக முடியாது. அந்நாட்டு அரசியல் சட்டப்படி வெளிநாட்டை சேர்ந்தவரை திருமணம் செய்தாலோ, அவரோ அல்லது அவரின் குழந்தைகளோ நாட்டின் உயரிய பதவியை வகிக்கமுடியாது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் தனது நம்பிக்கைக்கு உரியவரான ஹிதின் கியாவ் என்பவரை ஆன் சாங் சூகி களம் இறக்கியுள்ளார். இவர் சூகியின் பால்யகால நண்பர் மட்டுமின்றி அவருக்கு உதவியாளராகவும் உள்ளார். இவரை எதிர்த்து ராணுவத்தின் சார்பில் மியந்த் ஸ்வீ என்பவர் போட்டியிடுகிறார்.

657 உறுப்பினர்கள் கொண்ட பாராளுமன்றத்தில் இன்று காலை புதிய அதிபரை தேர்ந்தெடுப்பதற்கான வாக்குப்பதிவு தொடங்கியதாகவும் 652 எம்.பி.க்கள் இன்றைய வாக்கெடுப்பில் கலந்து கொண்டதாகவும் மியான்மர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. ஐந்து உறுப்பினர்கள் இன்று சபைக்கு வரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. 

இந்நிலையில் தற்பொது வந்துள்ள தகவலின்படி ஆங் சான் சூகி ஆதரவு பெற்ற ஹிதின் கியாவ் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இவர் அடுத்த அதிபராக தேர்வு பெற்றுள்ளார்.

Chennai Today News: Aung San Suu Kyi’s Close Aide Htin Kyaw Set To Become First Civilian President In 50 Years

Leave a Reply