shadow

சசிபெருமாள் மரணம் எதிரொலி: தமிழகத்தில் ஆக.4ஆம் தேதி முழு அடைப்பு?

sasiமதுவிலக்கை வலியுறுத்தி நேற்று போராட்டம் நடத்திய காந்தியவாதி சசிபெருமாளின் மரணம் தமிழகத்தை பெரும் அளவில் உலுக்கியுள்ளது. முதன்முதலாக இந்த போராட்டத்தில் ஒரு உயிர்த்தியாகம் ஏற்பட்டுள்ளதால் எப்படியாவது மதுக்கடைகளை மூடிவிட வேண்டும் என பொதுமக்களும், எதிர்க்கட்சி தலைவர்களும் தீவிர முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில் காந்தியவாதி சசிபெருமாள் உயிரிழப்பை தொடர்ந்து தமிழகத்தில் வரும் 4ஆம் தேதி முழு அடைப்புக்கு ஒருசில அரசியல் கட்சிகள் அழைப்பு விடுத்துள்ளன.
 
மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன், மனிதநேய மக்கள் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஜவாஹிருல்லா ஆகியோர் கூட்டாக இந்த அழைப்பை விடுத்துள்ளனர். முழு அடைப்புக்கு அனைவரும் ஆதரவு தர வேண்டும் என்றும் அவர்கள் கேட்டுக் கொண்டுள்ளனர்.

இது தொடர்பாக சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, ஆகஸ்ட் 4ஆம் தேதி முழு அடைப்பிற்கு அரசியல் கட்சிகள், வணிகர் சங்கம் ஆதரவு அளித்துள்ளன என்றார்.

டாஸ்டாக் மதுபான கடைகளால் தமிழ்நாடு நாசமாகிவிட்டது என்றும், சசிபெருமாள் உயிரிழப்புக்கு தமிழக அரசே காரணம் என்றும் வைகோ குற்றம்சாட்டினார்

Leave a Reply