ஆடி கார் நிறுவனத்தின் சி.இ.ஓ ரூபெர்ட் ஸ்டாட்லெர் கைது! காரணம் என்ன தெரியுமா?

ஜெர்மனி நாட்டை தலைமையிடமாக கொண்டு இயங்கி வரும் கார் தயாரிப்பு நிறுவனம் வோல்க்ஸ்வோகன், ஆடி கார் நிறுவனத்தின் தந்தை நிறுவனமாக இருந்து வருகிறது. இந்த நிலையில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன் தயாரிக்கப்பட்ட வோல்க்ஸ்வோகன் டீசல் கார்கள் நிர்ணயிக்கப்பட்ட அளவை விட, 40 மடங்கு அதிகமாக கார்பன் டை ஆக்சைடு புகையை வெளியேற்றுவது ஆய்வு ஒன்றில் தெரியவந்தது.

அமெரிக்காவில் நடந்த புகை மாசு பரிசோதனையில், அந்த நிறுவனம் முறைகேடு செய்ததும் வெளிச்சத்திற்கு வந்துள்ளதை அடுத்து போலியாக விளம்பரம் செய்து வாடிக்கையாளர்களை ஏமாற்றியதாகவும் குற்றச்சாட்டு எழுந்தது. இதனால் உலகம் முழுவதும் கடும் நெருக்கடியை சந்தித்த வோல்க்ஸ்வோகன் நிறுவனம், லட்சக்கணக்கான கார்களை திரும்பப்பெறும் நிலைக்கு தள்ளப்பட்டது

இந்த நிலையில், இந்த விவகாரத்தில் ஆடி கார் நிறுவனத்தின் சி.இ.ஓ ரூபெர்ட் ஸ்டாட்லெர் என்பவர் ஜெர்மனியில் இன்று கைது செய்யப்பட்டுள்ளார். மேலும், அந்நிறுவனத்தைச் சேர்ந்த 20-க்கும் மேற்பட்ட உயரதிகாரிகள் விசாரணை வளையத்திற்குள் சிக்கியுள்ளதாகவும், அவர்களும் விரைவில் கைது செய்யப்பட வாய்ப்பு இருப்பதாகவும் ஜெர்மனி ஊடகங்களில் செய்திகள் வெளியாகியுள்ளன.

வரன் தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *