shadow

atmமேற்கு டெல்லி பகுதியில் யூனியன் பேங்க் ஆஃப் இந்தியாவின் ஏ.டி.எம். மையத்தில் இருந்த ஏ.டி.எம் இயந்திரத்தையே கொள்ளையர்கள் தூக்கி சென்றுவிட்டதால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

இதுவரை ஏ.டி.எம் மையத்தில் பணம் எடுக்க வந்தவர்களிடம் கொள்ளையடிப்பது அல்லது ஏ.டி.எம். இயந்திரத்தை உடைத்து பணத்தை கொள்ளை அடிப்பது போன்ற சம்பவங்கள்தான் நடந்து வந்தது. ஆனால் தற்போது ஏ.டி.எம். இயந்திரமே கொள்ளையடிக்கப்பட்டுள்ள அதிர்ச்சி சம்பவம் டெல்லியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மேற்கு டெல்லியில், நரேலா எனும் பகுதியில் யூனியன் வங்கியின் ஏ.டி.எம். மையம் உள்ளது. இந்த மையத்தை இன்று காலை சுத்தப்படுத்த வந்த துப்புரவு தொழிலாளி, ஏ.டி.எம். இயந்திரம் அங்கு இல்லாததை கண்டு அதிர்ச்சி அடைந்து உடனடியாக காவல்துறையினர்களுக்கு தகவல் கொடுத்தார்.

இதனையடுத்து சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த போலீஸார் அந்த பகுதியில் உள்ளவர்களிடம் விசாரணை மேற்கொண்டனர். அப்போது, ஏ.டி.எம். இயந்திரம் மட்டுமல்லாமல் அங்கிருந்த கண்காணிப்பு கேமராவும் சேர்த்து திருடப்பட்டிருந்ததை போலீஸார் கண்டுபிடித்தனர்.

சம்பவம் குறித்து போலீஸ் அதிகாரி ஒருவர் கூறுகையில், “சம்பவம் நடந்த ஏ.டி.எம்- மையத்திற்கு காவலாளி நியமிக்கப்படவில்லை. பாதுகாப்பற்ற அந்த மையத்தை சூறையாடும் முன்னர் தெரு விளக்குகளும் உடைக்கப்பட்டிருக்கிறது” என்றார்.

Leave a Reply