ரஜினி, விஜய்யை முந்த முயற்சிக்கும் அதர்வா
Atharva
கோலிவுட்டின் பிரபல தயாரிப்பாளர் கலைப்புலி எஸ்.தாணு ஒரே நேரத்தில் நான்கு படங்களை தயாரித்து வருகிறார். சூப்பர் ஸ்டார் ரஜினி நடிக்கும் ‘கபாலி’, இளையதளபதி விஜய் நடிக்கும் ‘தெறி’, அதர்வா நடிக்கும் ‘கணிதன்’ மற்றும் எஸ்.ஏ.சந்திரசேகர் நடிக்கும் ‘நையப்புடை

இவற்றில் கபாலி மற்றும் தெறி ஆகிய படங்கள் கோடை விடுமுறையில் வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் இந்த இரண்டு படங்களுக்கும் முன்பே அதர்வா நடித்துள்ள ‘கணிதன்’ படத்தை வெளியிட தாணு திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

‘கணிதன்’ திரைப்படத்தின் படப்பிடிப்பு இதுவரை மெதுவாக நடந்து வந்த நிலையில் தற்போது ‘ஈட்டி’ படத்தின் வெற்றி காரணமாக முடுக்கிவிடப்பட்டு, கிட்டத்தட்ட நிறைவுப்பகுதிக்கு வந்துள்ளது. இப்படத்தின் போஸ்ட் புரடொக்ஷன்ஸ் பணிகளும் முடுக்கிவிடப்பட்டுள்ளதால் இந்த படம் வரும் பிப்ரவரியில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அதர்வா, கேதரின் தெரசா, கே.பாக்யராஜ், மனோபாலா, கருணாகரன், ஆடுகளம் நரேன் மற்றும் ஒய்.ஜி.மகேந்திரா உள்ளிட்ட பலர் நடித்துள்ள இந்த படத்தை டி.என்.சந்தோஷ் இயக்கியுள்ளார். டிரம்ஸ் சிவமணி இசையமைத்துள்ள இந்த படத்திற்கு அரவிந்த் கிருஷ்ணா ஒளிப்பதிவும் புவன்ஸ்ரீனிவாசன் படத்தொகுப்பும் செய்து வருகின்றனர்.

Chennai Today News: Atharva movie release before Rajini and Vijay movies

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *