கொரோனா வைரஸ் பாதிப்பு எப்போது விலகும்? பிரபல ஜோதிடர் தகவல்

தற்போது உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தலைவிரித்தாடி வரும் நிலையில் ஜோதிடர்கள் பலர் இந்த வைரஸ் பாதிப்பு எத்தனை நாட்கள் இருக்கும் என்பது குறித்து கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

இந்த நிலையில் பிரபல ஜோதிடர் ஒருவர் ஏற்கனவே உலகம் முழுவதும் ஜனவரி முதல் வைரஸ் தாக்கும் என்று கணித்த நிலையில் தற்போது இந்த வரைஸ் வரும் மே மாதம் வரை இருக்கும் என்றும் அதன்பி படிப்படியாக வைரஸின் தாக்கம் விலகிவிடும் என்று கூறியுள்ளார்.

தமிழகத்தை பொருத்தவரையில் கொரோனா பாதிப்பு அதிகம் இருந்தாலும் உயிரிழப்புகள் பெரிய அளவில் இருக்காது என்றும் அவர் மேலும் கூறியுள்ளார். மேலும் கொரோனா வைரசுக்கு சீனாவே மருந்து கண்டுபிடித்துவிடும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

ஏற்கனவே 14 வயது சிறுவரான ஜோதிடர் ஒருவரும் மே மாதத்தில் கொரோனாவின் பிரச்சனைக்கு தீர்வு காணப்படும் என்று தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply