shadow

மூன்று மாநில இடைத்தேர்தல் நிலவரம் என்ன?

மூன்று மாநிலங்களில் நான்கு தொகுதிகளுக்கு நடந்த இடைத்தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று காலை முதல் எண்ணப்பட்டு வரும் நிலையில் அதன் முன்னணி நிலவரம் குறித்து தற்போது பார்ப்போம்

1. டெல்லி பவனா நகரில் இடைத்தேர்தலில் 17வது சுற்றுவரை ஆம் ஆத்மி வேட்பாளர் 36,878 வாக்குகள் பெற்று முன்னிலையில் உள்ளார். அவரை அடுத்து காங்கிரஸ் வேட்பாளர் 24,648 வாக்குகளும், பாஜக வேட்பாளர் 21,992 வாக்குகளும், நோட்டா 899 வாக்குகளும் பெற்றுள்ளனர்.

2. கோவா முதல்வர் மனோகர் பாரிக்கர் 4803 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.

3. ஆந்திராவை சேர்ந்த நந்தியால் தொகுதியில் தெலுங்கு தேச வேட்பாளர் பிரம்மானந்த ரெட்டி19,706 வாக்குகள் முன்னிலை பெற்றுள்ளார்.

4. கோவாவின் இன்னொரு தொகுதியான வால்போய் தொகுதியில் நடைபெற்ற இடைத்தேர்தலில் சுகாதார அமைச்சர் விஸ்வாஜித் வெற்றி பெற்றுள்ளார்.

Leave a Reply