shadow

asin_650_052814025343

ராகுல்காந்தியை அமேதி தொகுதியில் எதிர்த்து போட்டியிட்டு தோல்வி அடைந்தாலும் மோடி மந்திரிசபையில் கல்வி அமைச்சராக பதவியேற்ற நடிகை ஸ்மிரிதி இரானி, நடிகை அசினின் நெருங்கிய நட்பு வட்டாரத்தில் இருந்துள்ளார் என்பது தற்போது தெரிய வந்துள்ளது.

பாலிவுட்டில் அபிஷேக் பச்சனுடன் அசின் நடித்த ஆல் இஸ் வெல் என்ற திரைப்படத்தில் அசினுக்கு அம்மாவாக ஸ்மிரிதி இரானி நடித்துள்ளார். அந்த படத்தின் படப்பிடிப்பின்போது இருவரும் நெருங்கிய தோழிகளாக மாறியுள்ளனர். படப்பிடிப்பு நடக்கும் நாட்களில் அசினுக்கு தினந்தோறும் தனது வீட்டில் இருந்தே மதிய சாப்பாடு எடுத்து வருவாராம் ஸ்மிரிதி இரானி.

ஸ்மிரிதி இரானி கல்வி அமைச்சராக பொறுப்பேற்ற பின்னர் டில்லியில் இருந்து ஸ்பெஷல் பூந்தி ஸ்வீட் பாக்ஸை வரவழைத்து அசின் அமைச்சருக்கு வழங்கி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

கல்வி அமைச்சராக மாறிய பின்னரும் ஸ்மிரிதி இரானி, தன்னிடம் முன்பு போலவே நெருக்கமாக பழகி வருவதாகவும், அவரிடம் எவ்வித பந்தாவும் இல்லை என்றும் அசின் கூறியுள்ளார். நடிகையாக இருக்கும்போதே சமூக நலனில் அக்கறையுள்ள ஒரு நல்ல உள்ளம் படைத்தவர் இரானி எனபதால், அவரது தலைமையின் கீழ் கல்வி அமைச்சகம் மிகச்சிறப்பாக செயல்படும் என தான் நம்புவதாக அசின் கூறியுள்ளார்.

இந்நிலையில் தன்னை எதிர்த்து போட்டியிட்டவருக்கு கல்வி அமைச்சர் பதவி பெற்றதில் ராகுல்காந்தி அதிர்ச்சி அடைந்ததாக காங்கிரஸ் வட்டாரத்தில் கூறப்படுகிறது.

Leave a Reply