shadow

ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி: தோனி அதிரடியால் இந்தியா சாம்பியன்
asia cup1
ஆசியக்கோப்பை கிரிக்கெட் போட்டியின் இறுதியாட்டம் நேற்று வங்கதேசத்தில் நடைபெற்றது. இந்தியா-வங்கதேசம் மோதிய இந்த இறுதிப்போட்டியில் கடைசி நேரத்தில் தோனி 6 பந்துகளில் 20 ரன்கள் எடுத்து வெற்றியை உறுதி செய்தார். சாம்பியன் பட்டம் வென்ற இந்தியாவுக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது.

நேற்றைய இறுதிப்போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி, வங்கதேசத்தை பேட்டிங் செய்யுமாறு கேட்டுக்கொண்டது. 15 ஓவர் போட்டியாக மாற்றப்பட்ட இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த வங்கதேச அணி 5 விக்கெட்டுக்கள் இழப்பிற்கு 120 ரன்கள் எடுத்தது. 121 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இந்திய அணியின் ரோஹித் சர்மா ஆரம்பகட்டத்திலே அவுட் ஆனதால் கிரிக்கெட் ரசிகர்களிடையே அதிர்ச்சி ஏற்பட்டது. இருப்பினும் ஷிகர் தவான் மற்றும் விராத் கோஹ்லியின் பொறுப்பான ஆட்டத்தால் ரன்கள் உயர்ந்தது.

13வது ஓவர் முடிவில் இந்திய அணி வெற்றி பெற 12 பந்துகளில் 19 ரன்கள் எடுக்க வேண்டும் என்ற நிலை இருந்தது. இந்நிலையில் களத்தில் இருந்த தோனி அதிரடியாக விளையாக 14வது ஓவரில் இரண்டு சிக்சர்கள் மற்றும் ஒரு பவுண்டரியுடன் ஆட்டத்தை வெற்றியுடன் முடித்தார். வழக்கம்போல் வின்னிங் ஷாட் அடித்து சாம்பியன் பட்டம் பெற்றுத்தந்த தோனிக்கு டுவிட்டர், ஃபேஸ்புக்கில் வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது.

asia cup  CRICKET-ASIACUP-BAN-IND CRICKET-ASIACUP-BAN-IND

Leave a Reply