அரசு பேருந்துகள், பள்ளி-கல்லூரிகள் இயங்கின: திரும்பியது இயல்பு வாழ்க்கை

திமுக தலைவர் கருணாநிதியின் உடல் நேற்று நல்லடக்கம் செய்யப்பட்ட நிலையில், இன்று வழக்கம் போல் பள்ளி, கல்லூரிகள் இயங்கும் என்றும் அரசு மற்றும் தனியார் நிறுவனங்கள் இன்று இயங்கும் என்றும் அதிகாரிகள் தெரிவித்துள்ளதால் இன்று காலை முதல் சென்னை உள்பட தமிழகம் முழுவதும் இயல்பு வாழ்க்கை திரும்பியது

கருணாநிதியை மறைவைத் தொடர்ந்து தமிழக அரசு சார்பில் நேற்று ஒருநாள் அரசு பொதுவிடுமுறை அறிவிக்கப்பட்டது. அதோடு, பள்ளி, கல்லூரிகளுக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டது. பெட்ரோல் பங்குகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில், கருணாநிதியின் உடல் நல்லடக்கம் செய்யப்பட்டதைத் தொடர்ந்து இன்று வழக்கம் போல் பள்ளி, கல்லூரிகள் உள்பட மற்ற கல்வி நிறுவனங்கள் இயங்கும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

மேலும், அரசுப் பேருந்துகளும் இன்று இயங்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழக அரசு சார்பில் ஒரு வாரம் துக்கம் கடைபிடிக்கப்படுகிறது. இதனால், வரும் 14ம் தேதி எந்த ஒரு நிகழ்ச்சிகளும், கொண்டாட்டங்களும் நடத்தப்படாது. தேசியக் கொடி அரைக்கம்பத்தில் பறக்கும். வரும் 15ம் தேதி சுதந்திர தினம் கொண்டாடப்படுகிறது. அன்று அனைத்து நிகழ்ச்சிகளும் நடத்தப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *