ஓய்வு பெற்ற டிரைவருக்கு டிரைவராக மாறிய கலெக்டர்

1மகாராஷ்டிர மாநிலத்தில் உள்ள பல கலெக்டர்களுக்கு கடந்த சுமார் 35 ஆண்டுகள் டிரைவராக பணிபுரிந்த திகம்பர் என்பவர் இன்று ஓய்வு பெற்றார். அவரை கெளரவப்படுத்தும் வகையில் ஓய்வு பெற்ற திகம்பர் தாக்கின் கடைசி நாளான இன்று அகோலா மாவட்ட கலெக்டர் ஜி. ஸ்ரீகாந்த் டிரைவராக மாறி திகம்பரை வீடு வரை சென்று வழியனுப்பினார். இந்த சம்பவம் கலெக்டர் அலுவலக ஊழியர்களை நெகிழ்ச்சி அடைய செய்துள்ளது.

சுமார் 35 வருடங்கள் தனக்கும் தனக்கு முன்னால் பணிபுரிந்த டிரைவர்களுக்கும் டிரைவாக இருந்து இன்று பணி ஓய்வு பெற்று வீட்டுக்குச் செல்ல தயாரான திகம்பரை, அலங்கரிக்கப்பட்ட கலெக்டரின் காரின் பின் இருக்கையில் அமரவைத்து, கலெக்டரே ஸ்ரீகாந்த் அவர்களே டிரைவராக மாறி அவரை வீட்டுக்கு அழைத்துச் சென்றார்

இத்தனை நாள் உண்மையாக வேலை செய்த திகம்பருக்கு இந்த நாள் ஒரு மறக்க முடியாத நாளாக அமைந்தது.

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *