shadow

ஆர்யாவின் அடுத்த படத்தை இயக்கும் அடல்ட்ஸ் இயக்குனர்

சமீபத்தில் வெளியான அடல்ட்ஸ் காமெடி திரைப்படமான ‘ஹரஹர மகாதேவகி’ படத்தை இயக்கிய சந்தோஷ் ஜெயகுமார் தற்போது இயக்கவுள்ள அடுத்த படம் குறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

சந்தோஷின் அடுத்த படத்தில் ஆர்யா நாயகனாக நடிக்கவுள்ளார். இவருக்கு ஜோடியாக முன்னணி நடிகை ஒருவர் நடிக்க பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. இந்த படத்திற்கு ‘கஜினிகாந்த்’ என்ற டைட்டில் முடிவு செய்யப்பட்டுள்ளது.

இந்த படத்தை ‘ஹரஹர மகாதேவகி’ படத்தை தயாரித்த ஸ்டுடியோ க்ரீன் நிறுவனமே தயாரிக்கின்றது. இந்த தகவலை ஸ்டுடியோ க்ரீன் ஞானவேல்ராஜா தனது டுவிட்டரில் உறுதி செய்துள்ளார்.

இந்த படத்தின் படப்பிடிப்பு அடுத்த ஆண்டு ஜனவரியில் தொடங்கி வரும் ஏப்ரலில் வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது.

Leave a Reply