shadow

பிப்ரவரி 12-ல் ரிலீஸ் ஆகிறது ஆர்யா-நயன்தாரா படம்
aryanayan
ஆர்யா மற்றும் நயன்தாரா ஏற்கனவே பாஸ் என்கிற பாஸ்கரன் மற்றும் ராஜா ராணி ஆகிய படங்களில் ஜோடியாகவும், அஜித் நடித்த ஆரம்பம் படத்தில் முக்கிய நட்சத்திரங்களாகவும் நடித்துள்ள நிலையில் தற்போது மீண்டும் ஒருமுறை இணைந்து நடித்துள்ளனர். ‘புதிய நியமம்’ என்ற மலையாள படத்தில் படத்தில் இவர்கள் இருவரும் இணைந்து நடித்துள்ளதாகவும் இந்த படம் வரும் 12ஆம் தேதி ரிலீஸ் ஆகவுள்ளதாகவும் தகவல்கள் வந்துள்ளது.

மலையாள சூப்பர் ஸ்டார் மம்முட்டிக்கு ஜோடியாக நயன்தாரா நடித்துள்ள ‘புதிய நியமம்’ என்ற படம் வரும் வெள்ளியன்று வெளியாகிறது. ஏ.கே.சாஜன் இயக்கியுள்ள இந்த படத்தில் ஆர்யா சிறப்பு தோற்றமாக நடித்திருந்தாலும் கதைக்கு திருப்பத்தை கொடுக்கும் கேரக்டரில் நடித்துள்ளதாகவும், கூறப்படுகிறது. ஏற்கனவே ஆர்யா, ‘உறுமி’ மற்றும் டபுள் பேரல் ஆகிய மலையாள படங்களில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

த்ரில் மற்றும் குடும்ப செண்டிமெண்ட் கலந்த இந்த படம் கேரளாவில் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள படம் என்பதும் இந்த படத்திற்கு கிடைக்கும் வரவேற்பை அடுத்து ஆர்யா, தனது தாய்மொழியான மலையாளத்தில் மேலும் சில படங்களை நடிக்க அவர் முடிவு செய்துள்ளதாகவும் கூறப்படுகிறது.,

Leave a Reply