shadow

தேசிய அளவில் 3வது கூட்டணி. ஆம் ஆத்மி கட்சியின் தொலைநோக்கு திட்டம்

aravindகாங்கிரஸ், பாஜக என இரண்டு தேசிய கட்சிகளை மண்ணை கவ்வ செய்து டெல்லியில் ஆட்சியை பிடித்த ஆம் ஆத்மி நிறுவனர் அரவிந்த் கெஜ்ரிவால், தனது கட்சியை காங்கிரஸ், பாஜகவுக்கு அடுத்து 3வது தேசிய கட்சியாக மாற்றும் முயற்சியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளார். இதன் முதல்படியாக விரைவில் வரவிருக்கும் உத்தரப்பிரதேசம், உத்தரகாண்ட், பஞ்சாப், குஜராத், கோவா ஆகிய 5 மாநில சட்ட சபை தேர்தலில் முதல்வர் வேட்பாளர்களை நிறுத்துவதோடு, ஐந்து மாநிலங்களுக்கும் சூறாவளி பிரச்சாரம் செய்ய திட்டமிட்டுள்ளார்.

ஏற்கனவே மணிப்பூர் மாநில முதல்வர் வேட்பாளராக 16 ஆண்டுகள் உண்ணாவிரதம் இருந்த ஷர்மிளாவை முதல்வர் வேட்பாளராக அறிவிக்க தயார் என்று அரவிந்த் கெஜ்ரிவால் அறிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

பஞ்சாப், கோவா, குஜராத் ஆகிய மாநிலங்களில் தற்போதே அரவிந்த கெஜ்ரிவால் பிரச்சாரத்தை தொடங்கிவிட்டதாகவும், பஞ்சாப் மாநிலத்தில் ஒரு படி அதிகமாக 19 வேட்பாளர்களையும் அவர் அறிவித்துவிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது. இன்னும் ஒருசில ஆண்டுகளில் இந்தியா முழுவதும் ஆம் ஆத்மி ஆட்சி அமைக்க வேண்டும் என்பதே அவருடைய தொலைநோக்கு திட்டம் என்று ஆம் ஆத்மி கட்சி நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.,

Leave a Reply