முன்னாள் டெல்லி முதல்வரும் ஆம் ஆத்மி கட்சியின் தலைவருமான அரவிந்த் கெஜ்ரிவால், இன்று உத்தரபிரதேச மாநிலத்தில் தீவிரமாக தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார். கான்பூர் நகரில் அவர் கலந்து கொண்ட ஒரு கூட்டத்தில் பேசியபோது பாரதிய ஜனதா கட்சியின் பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடியை கடுமையாக தாக்கி பேசினார்.

நரேந்திர மொடியின் தேர்தல் பிரச்சார செலவுகளை முகேஷ் அம்பானிதான் செய்துவருகிறார். இதை என்னால் நிரூபிக்க முடியும். அவர் நாடு முழுவதும் சுற்றுப்பயணம் செய்வது முமேஷ் அம்பானியின் நிறுவனத்தின் விமானத்தில்தான். இவர் ஆட்சிக்கு வந்தால் எப்படி ஒரு நேர்மையான ஆட்சியை கொடுக்க முடியும். நரேந்திர மோடி டீ விற்று எப்படி இத்தனை விமானங்களையும் ஹெலிகாப்டர்களையும் வாங்கினார் என்பதை அவர்தான் விளக்கவேண்டும்.

நாடாளுமன்ற தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி கண்டிப்பாக காங்கிரஸ் கட்சியை விட அதிக தொகுதிகளில் வெற்றி பெறும். எங்களுடைய தயவு இல்லாமல் யாராலும் ஆட்சி அமைக்க முடியாது. தேர்தலுக்கு பின்னர் நாட்டின் தலையெழுத்தையே மாற்றிக்காட்டுவோம்.

எங்களால் மட்டுமே நேர்மையான, ஊழலற்ற ஆட்சியை வழங்க முடியும். இதற்காக இந்து, முஸ்லிம் மற்றும் அனைத்து மத மக்களும் ஒன்று சேர்ந்து வாக்களித்தால், எங்கள் ஆதரவு அரசு அமையும் என்பதை உறுதியாக தெரிவித்துக் கொள்கிறேன்.

இவ்வாறு அரவிந்த் கெஜ்ரிவால் பேசினார்.

Leave a Reply