shadow

கவர்னர் வீட்டில் படுத்து தூங்கி தர்ணா போராட்டம் நடத்திய முதலமைச்சர்

டெல்லியில் நடைபெற்று வரும் ஆம் ஆத்மி தலைமையிலான ஆட்சிக்கு அவ்வப்போது கவர்னர் மூலம் மத்திய அரசு முட்டுக்கட்டை போட்டு வருவதாக ஆளும் ஆம் ஆத்மி குற்றஞ்சாட்டி வரும் நிலையில் சமீபத்தில் முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் ரேசன் பொருட்களை வீடு தேடி சென்று வழங்கும் திட்டம் ஒன்றை கொண்டு வந்தார். இந்த திட்டத்தை அமல்படுத்திட சம்பந்தப்பட்ட துறை ஐ.ஏ.எஸ். அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். ஆனால் கெஜ்ரிவால் உத்தரவை ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் மதிக்கவில்லை. இதனால் மக்கள் திட்டங்களை செயல்படுத்தாத அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க கோரி கவர்னர் வீட்டில் படுத்து தூங்கி தர்ணாவில் ஈடுபட்டார் முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால். இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது..

இதுகுறித்து ஆலோசனை செய்ய நேற்று இரவு துணை நிலை கவர்னர் அனில் பைஜாலை சந்திக்க அவரது இல்லம் சென்றார். ஆனல் அவரை சந்திக்க அனுமதி மறுக்கப்பட்டது. அதனால் கவர்னர் வீட்டின் வரவேற்பாளர் அறையில் பல மணி நேரம் அமர்ந்து காத்திருப்பு போராட்டத்தை துவக்கினார். அவருடன் மாநில மந்திரிகளும் உடனிருந்தனர்.

இதுகுறித்து கெஜ்ரிவால் கூறுகையில், அரசின் திட்டங்களை ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் நிறைவேற்ற மறுக்கின்றனர். சட்டசபையில் டில்லிக்கு மாநில அரசு அந்தஸ்து அளிக்கும் தீர்மானம் நேற்று கொண்டு வரப்பட்டது. மத்திய அரசின் கைப்பாவையாக துணை நிலை கவர்னர் செயல்படுவது சரியல்ல என கூறினார்.

Leave a Reply