shadow
அருவி’ இயக்குனரின் அடுத்த படத்திலும் அதிதிபாலன்?
கடந்த ஆண்டு வெளியான ‘அருவி’ திரைப்படம் அந்த படத்தில் அறிமுக நாயகி அதிதிபாலனுக்கு பெரும்புகழை தேடித்தந்தது. இருப்பினும் அவருக்கு இன்னும் அடுத்த படம் புக் ஆகவில்லை
இந்த நிலையில் ‘அருவி’ படத்தை இயக்கிய அருண்பிரபு தனது இரண்டாவது படத்தை 24ஏம் ஸ்டுடியோ நிறுவனத்திற்காக இயக்க ஒப்பந்தமாகியுள்ளார். இதுவரை சிவகார்த்திகேயன் படங்களை மட்டுமே தயாரித்து வந்த ஆர்.டி.ராஜா தற்போது அருண்பிரபு இயக்கும் படத்தை தயாரிக்கவுள்ளார்.
இந்த படத்தின் பூஜை இன்று குமுளி அருகே உள்ள ஆசிரமத்தில் நடைபெற்றது. முதல் படத்தில் நடித்த அதிதிபாலன் தான் இந்த படத்திலும் நாயகியாக நடிப்பார் என்று கூறப்பட்டாலும் இந்த செய்தியை படக்குழுவினர் இதுவரை உறுதி செய்யவில்லை. இந்த படத்தில் நடிக்கும் நட்சத்திரங்கள் தேர்வு நடைபெற்று வருவதாகவும் விரைவில் இதுகுறித்த அறிவிப்பு வெளிவரும் என்றும் கூறப்படுகிறது.

Leave a Reply