arunachal pradeshஅருணாச்சல பிரதேச முதலமைசர் நபம் டுகியின் பரிந்துரையை ஏற்று, அருணச்சல பிரதேச மாநிலத்தின் சட்டசபையை கலைக்க இன்று கவர்னர் நிர்பய் ஷர்மா உத்தரவிட்டுள்ளார்.

இன்று காலை செய்தியாளர்களிடம் பேசிய அருணாச்சலப் பிரதேச தலைமைச் செயலாளர் ரமேஷ் நெகி, பாராளுமன்ற தேர்தலுடன் அருணாச்சல பிரதேச சட்டசபைக்கும் தேர்தல் நடத்த மாநில அரசு முடிவெடுத்துள்ளது. நடப்பு சட்டசபையின் பதவிக்காலம் வருகின்ற அக்டோபர் மாதம் வரை இருந்தாலும் செலவுகளை தவிர்க்க இரண்டு தேர்தல்களையும் ஒரே நேரத்தில் நடத்த அமைச்சரவை பரிந்துரைத்துள்ளது என்று கூறியுள்ளார்.

தேர்தல் தேதிகளை ஏற்கனவே அறிவித்த பிறகு திடீரென மாநில அரசு இவ்வாறு  முடிவெடுத்துள்ளதால், தேர்தல் ஆணையத்திற்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது.

நாடாளுமன்றத் தேர்தலுடன் சட்டசபைக்கும் தேர்தல் நடத்துவது குறித்து தேர்தல் ஆணையம் வரும் திங்கட்கிழமை முடிவெடுக்கும் என கூறப்படுகிறது.

Leave a Reply