shadow

பிரபல இயக்குனர் சுசீந்திரன் இயக்கும் அடுத்த படத்தில் அருண் விஜய் நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது.

இது குறித்து பேச்சுவார்த்தை முடிந்து விட்டதாகவும் விரைவில் இந்த படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என்றும் கூறப்படுகிறது

நடிகர் அருண் விஜய் தற்போது பார்டர், அக்னி சிறகுகள், யானை உள்பட 5 திரைப்படங்களில் நடித்து வருகிறார்

சுசீந்திரன், அருண் விஜய் முதல் முறையாக இணையும் இந்தப் படம் மிகப் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது