shadow

rahul_PTI1கடந்த பாராளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் படுதோல்வி அடைந்ததற்கு ராகுல்காந்தியின் திறமையின்மைதான் காரணம் என காங்கிரஸ் தலைவர்கள் வெளிப்படையாக பேசி வரும் நிலையில் கட்சியை மீட்டெடுக்க ப்ரியங்கா காந்தி அரசியலில் குதிக்க வேண்டும் என முக்கிய காங்கிரஸ் தலைவர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். இதனால் டென்ஷன் அடைந்த ராகுல்காந்தி நேற்றைய பாராளூமன்ற கூட்டத்தொடரின்போது அங்கு ஆவேசமாக நடந்துகொண்டார்.

இதுவரை அமைதியாகவே செயல்பட்டு வந்த ராகுல்காந்தி, நேற்று மற்ற உறுப்பினர்களை போல அவையின் மையப்பகுதிக்கு வந்து சபாநாயகருக்கு எதிராக கோஷம் எழுப்பினார். மேலும், சபாநாயர் சுமித்ரா மகாஜன் பாரபட்சமாக நடந்து கொள்வதாக அவர் மீது ஆவேசமாக குற்றஞ்சாட்டினார்.

இது குறித்து கருத்து தெரிவித்த பாரதிய ஜனதா கட்சியின் முக்கிய தலைவர் அருண் ஜெட்லி, ”ப்ரியங்கா காந்தி காங்கிரஸ் தலைமைப் பொறுப்பை ஏற்கவேண்டும் என்று காங்கிரஸ் கட்சியின் முக்கிய தலைவர்களே கோரி வருவதால், ராகுல் காந்தி டென்ஷன் அடைந்துள்ளதாகவும், அவருடைய கட்சியின் டென்ஷன்களை கட்சி தலைமையிடம்தான் காண்பிக்கவேண்டுமே தவிர  நாடாளுமன்றத்தில் தேவையில்லாமல் கோஷமிடுவதால் எந்தவித பயனும் இல்லை” என்றார். இதனால் ராகுல்காந்தி மேலும் கோபம்அடைந்துள்ளார்.

Leave a Reply