shadow

பஞ்சாப் வங்கி மோசடியில் அருண்ஜெட்லி மகளுக்கு தொடர்பா? ராகுல்காந்தி குற்றாச்சாட்டு

பஞ்சாப் நேஷனல் வங்கியில் ரூ.13 ஆயிரம் கோடி வரை மோசடி நடந்திருப்பது குறித்து தனது டுவிட்டரில் கருத்து தெரிவித்த காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி மத்திய நிதியமைச்சர் அருண்ஜெட்லி மீது அதிர்ச்சி குற்றச்சாட்டு ஒன்றை முன்வைத்துள்ளார்.

இதுகுறித்து ராகுல்காந்தி தனது டுவிட்டரில் கூறியபோது, ‘“வங்கி முறைகேட்டில் ஈடுபட்ட சில குற்றவாளிகள் வெளிநாட்டுக்கு தப்பிச் செல்லும் ஒரு மாதத்துக்கு முன்பாக அருண்ஜெட்லியின் மகளான வக்கீல், தனது சட்ட நிறுவனத்தின் பணிக்காக பெரும் தொகையை பெற்று இருக்கிறார். இதனால்தான் வங்கி மோசடி விவகாரத்தில் நிதி மந்திரி மவுனம் காத்து வருகிறார் என்பது தற்போது தெரிய வந்துள்ளது” என்றார்.

“இதுபோன்ற சட்ட நிறுவனங்களில் சி.பி.ஐ. சோதனை நடத்தி வரும் நிலையில், இவருடைய (அருண்ஜெட்லி) மகளின் சட்ட நிறுவனத்தில் சி.பி.ஐ. ஏன் சோதனை நடத்தக்கூடாது?” என்றும் அவர் கேள்வி எழுப்பினார்.

Leave a Reply