நிதியமைச்சர் அருண்ஜெட்லிக்கு கூடுதல் பதவி

மத்திய பாதுகாப்பு துறை அமைச்சர் மனோகர் பாரிக்கர் கோவா முதல்வராக பதவியேற்கவுள்ளதை அடுத்து தனது மத்திய அமைச்சர் பதவியை அவர் ராஜினாமா செய்தார்.

இந்நிலையில் அவர் வகித்து வந்த பாதுகாப்பு துறை அமைச்சகத்தையும் நிதியமைச்சர் அருண்ஜெட்லி கூடுதலாக கவனிப்பார் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது.

கோவா மாநிலத்தில் சிறு கட்சிகளின் உதவியுடன் பாஜக ஆட்சி அமைக்கின்றது. இந்த மாநிலத்தின் முதல்வராக நேற்று மனோகர் பாரிக்கர் தேர்வு செய்யப்பட்டார். அவரை ஆட்சி அமைக்க கோவா கவர்னர் அழைப்பு விடுத்ததோடு இன்னும் 15 தினங்களில் தனது பெரும்பான்மையை அவர் நிரூபிக்க வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளார்.

வரன் தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!
shadow

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *