கமல் வழியில் செல்லும் அருள்நிதி

arulnidhiபிரபல மலையாள இயக்குனர் ஜீத்துஜோசப் இயக்கிய ‘த்ரிஷ்யம்’ படத்தில் உலக நாயகன் கமல்ஹாசன் நடித்து வெற்றி பெற்றதை அடுத்து அவருடைய வழியிலேயே அருள்நிதியும் ஜீத்து ஜோசப்பின் மற்றொரு படத்தை ரீமேக் செய்ய முடிவு செய்துள்ளார். கடந்த 2013ஆம் ஆண்டில் ஜித்து ஜோசப் இயக்கத்தில் பிரித்விராஜ், மியா ஜார், மேக்னா ராஜ், நெடுமுடிவேணு மற்றும் பலர் நடிப்பில் வெளிவந்த அதிரடி திகில் படமான ‘மெமொரிஸ்’ என்ற படத்தை தமிழில் ரீமேக் செய்ய அருள்நிதி முடிவு செய்துள்ளதாகவும், அதற்கான ஆரம்பகட்ட பணிகள் தொடங்கிவிட்டதாகவும் கூறப்படுகிறது.

ஈரம் படத்தை இயக்கிய அறிவழகன் இந்த படத்தை இயக்கவுள்ளதாகவும், இந்த படத்தை ஸ்ரீதேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனத்தினர் தயாரிக்கவுள்ளதாகவும் செய்திகள் வெளிவந்துள்ளது. மலையாளத்தில் நடித்த மியா ஜார்ஜ் இந்த படத்திலும் நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது. இவர் சமீபத்தில் வெளியான ‘நேற்று இன்று நாளை’ படத்தில் விஷ்ணுவுக்கு ஜோடியாக நடித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த படத்தில் நடிக்கும் மற்ற நடிகர், நடிகையர் தேர்வு நடைபெற்று வருவதாகவும், இந்த படத்தின் படப்பிடிப்பு வரும் அக்டோபரில் தொடங்கும் என்றும்  அடுத்த வருடம் பிப்ரவரியில் இந்த படத்தை ரிலீஸ் செய்யவும் படக்குழுவினர் முடிவு செய்திருப்பதாகவும் கூறப்படுகிறது.

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *