வைரமுத்துவை கைது செய்ய வலியுறுத்தி ஸ்ரீவில்லிபுத்தூரில் போராட்டம்

சமீபத்தில் இராஜபாளையத்தில் நடந்த கருத்தரங்கு ஒன்றில் கலந்து கொண்ட கவியரசு வைரமுத்து, அந்த பகுதியினர் தெய்வமாக வழிபட்டு வரும் ஆண்டாள் குறித்து சர்ச்சைக்குரிய கருத்து ஒன்றை தெரிவித்தார்.

இந்த கருத்துக்கு இந்து அமைப்புகளும், பாஜகவினர்களும், இந்துமத ஆதரவாளர்களும், பொதுமக்களும் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் அதிர்ச்சி அடைந்த வைரமுத்து தனது டுவிட்டரில் வருத்தம் தெரிவித்தார். இருப்பினும் வருத்தம் தெரிவித்தால் மட்டும் போதாது அவர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் ஆண்டாளை இழிவாக பேசியதாக கவிஞர் வைரமுத்துவை கைது செய்ய வலியுறுத்தி, ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலில் ராமானுஜ ஜீயர் தலைமையில் உண்ணாவிரதம் நடந்து வருகிறது. இதனால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *