shadow

vikram and arnold

பிரமாண்ட இயக்குனர் ஷங்கரின் “ஐ” படம் படப்பிடிப்புகள் முடிவடைந்து தொழில்நுட்ப வேலைகள் மும்முரமாக நடந்து வருகிறது. இந்நிலையில்  “ஐ” படத்தின் இசை வெளியீட்டு விழா குறித்த செய்திகள் தற்போதே வெளிவரத் தொடங்கிவிட்டது

“ஐ” படத்தின் தயாரிப்பாளர் ஆஸ்கார் ரவிச்சந்திரன் படத்தை போலவே இசைவெளியீட்டு விழாவையும் பிரமாண்டமாக நடத்த முடிவு செய்துள்ளார். ஹாலிவுட்டின் பிரபல நடிகரும், கலிபோர்னியா மாகாண முன்னாள் கவர்னருமான அர்னால்டு,  “ஐ” படத்தின் ஆடியோ விழாவுக்கு வருவதற்கு ஒப்புக்கொண்டுள்ளார்.

ஆஸ்கார் ரவிச்ச்ந்திரன் தனது தசாவதாரம் படத்தின் இசைவெளியீட்டு விழாவின்போது ஜாக்கிசானை வரவழைத்தவர் என்பது அனைவரும் அறிந்ததே. இம்முறை அர்னால்டை வரவழைத்து கோலிவுட்டை ஆச்சரியப்படுத்த இருக்கிறார். டெர்மினேட்டர், ட்ரூ லைஸ் போன்ற படங்களின் மூலம் தமிழ் ரசிகர்களுக்கு நன்கு அறிமுகமான்வர்தன் அர்னால்டு என்றாலும், இந்த படத்தின் கதை பாடி பில்டிங் மையமாக வைத்து எடுக்கப்பட்டுள்ளதால் அதற்கு பொருத்தமாக ஒரு பாடி பில்டர் நடிகரை வரவழைப்பது பொருத்தமாக இருக்கும் என்பவதற்காகவே அர்னால்டை அழைத்துல் வர இருப்பதாக ஆஸ்கார் ரவிச்சந்திரன் கூறுகிறர்.

“ஐ” படத்தின் இசைவெளியீட்டு விழா தேதியை விரைவில் அறிவிக்கப்பட இருக்கிறது.

வரன் தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!
shadow

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *