shadow

jaya and modiதமிழக முதல்வர் ஜெயலலிதாவை குறிக்கும் வகையில் எவ்வித அவதூறு கருத்துக்களும் இலங்கை அரசின் பாதுகாப்பு இணையதளத்தில் வெளியான கட்டுரையில் இல்லை, அந்த கட்டுரையை 90% பேர் முழுவதும் படிக்காமல் படத்தை மட்டுமே பார்த்து தவறாக புரிந்து கொண்டுள்ளனர்  என இலங்கை ராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் ருவன் வணிகசூரிய இன்று கூறியுள்ளார். இதனால் முடிந்துபோனதான கருதப்பட்ட இந்த விஷயம் மீண்டும் பரபரப்புக்கு உள்ளாகியுள்ளது.

இலங்கை தலைநகர் கொழும்பில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய ருவன் வணிகசூரிய “இலங்கை அரசின் பாதுகாப்பு அமைச்சக இணையதளத்தில் இந்திய பிரதமர் நரேந்திர மோடி குறித்தும் தமிழக முதல்வர் ஜெயலலிதா குறித்தும் எவ்வித அவதூறான கருத்துக்களும் இடம்பெறவில்லை. அந்தக் கட்டுரையின் நோக்கம் இலங்கை தொடர்பான இந்திய அரசின் நிலைப்பாடு மற்றும், சேது சமுத்திர திட்டம் குறித்தும், தெற்காசிய கடற்பிராந்தியத்தில் மீனவர்களின் பாதுகாப்பு தொடர்பான தகவல்களை தெரிவிப்பது மட்டுமே நோக்கமாக இருந்தது.

ஆனால் இந்த கட்டுரை தொடர்பாக எதிர்ப்பு வெளியிட்டவர்கள் 100க்கு 90 பேர்கள் இணைய தளத்தில் வெளியான கட்டுரையை முழுமையாக படிக்காமல், அந்த கட்டுரையில் வெளியான படத்தை பார்த்து எதிர்ப்பை தெரிவித்துள்ளனர். உண்மையில் அந்த படத்தை, இணையதளத்தை பராமரிக்கும் நபர் ஒருவர் தவறாக பதிவு செய்துள்ளார். இதற்கும் இலங்கை அரசுக்கும் எவ்வித சம்மந்தமும் இல்லை. இதுகுறித்து விசாரணை நடந்து வருகிறது என்று கூறியுள்ளார்.

Leave a Reply