காஷ்மீர் கலவரத்தை அடக்க கமல்ஹாசனின் கட்டிப்பிடி வைத்தியம். கர்னலின் வித்தியாசமான முயற்சி

1காஷ்மிரில் கடந்த இரண்டு மாதங்களுக்கும் மேலாக இயல்பு நிலை இல்லாததால் அங்கு பள்ளி, கல்லூரிகள், கடைகள் மூடப்பட்டுள்ளன. மேலும் தற்போது பாகிஸ்தானுக்கு இந்தியா பதிலடி கொடுத்து வருவதால் இந்த நேரத்தில் காஷ்மீரில் அமைதி திரும்ப வேண்டியது அவசியம் என கருதப்படுகிறது.

குறிப்பாக ஹிஸ்புல் முஜாகிதீன் இயக்கத்தின் முக்கிய தலைவர்களில் ஒருவரான புர்ஹான் வானி சுட்டுக்கொல்லப்பட்ட ஆனந்த்நாக் மாவட்டத்தின் கர்னல் தர்மேந்திர யாதவ் அந்த பகுதியில் அமைதியை ஏற்படுத்த வித்தியாசமான முயற்சியில் ஈடுபட்டுள்ளார்.

அந்த பகுதியில் உள்ள முதியவர்கள் மற்றும் குழந்தைகளை பார்த்தால் உடனே அவர்களை கட்டிப்பிடித்து ஆறுதல் சொல்லி அவர்களுடைய குறைகளை அக்கறையுடன் கேட்கின்றாராம். இதுகுறித்து அவர் செய்தியாளர்களிடம் கூறியபோது, ”’முன்னாபாய் எம்பிபிஎஸ் (தமிழில் வசூல்ராஜா எம்பிபிஎஸ்) சினிமாவில் வரும் கட்டிப்பிடி வைத்தியத்தைதான் இங்கும் பின்பற்றுகிறேன். சில ஆண்டுகளுக்கு முன்பு அந்த சினிமா பார்த்தேன். அந்த காட்சி என்னை இம்ப்ரெஸ் செய்தது. தற்போது காஷ்மீர் மக்களுக்கு நம்பிக்கை ஊட்டும் வகையில் இதனை செய்கிறேன். இப்போது குழந்தைகள் என்னை ‘ஆர்மி அங்கிள்’ என்று அழைக்கின்றனர். இந்த பெயர் நான் வாங்கியது அல்ல. சம்பாதித்தது ” என்கிறார் கர்னல் தர்மேந்திர யாதவ்.

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *