shadow

தொடர் போராட்டம் எதிரொலி: ஆர்மீனிய பிரதமர் பதவி விலகல்

ஆர்மீனிய பிரதமர் செர்க் சார்கிஸ்யான் (Serzh Sargsyan) பதவி விலக வேண்டும் என்று அந்நாட்டு மக்கள் கடந்த சில நாட்களாக போராட்டம் செய்து வந்த நிலையில் தொடர் போராட்டம் காரணமாக செர்க் பதவி விலகினார். இவர் பிரதமர் பதவியில் இருந்து விலகியதை அடுத்து ஏராளமான மக்கள் தலைநகர் எரவான் வீதிகளில் கொண்டாட்டங்களில் ஈடுபடுகின்றனர்.

ஆயிரக்கணக்கான மக்கள் போலிசாரை அணைத்துக்கொண்டு, கொடிகளை அசைத்துக்கொண்டு நடனமாடினர்கள். இரண்டு முறை அதிபராகப் பதவி வகித்தபிறகு பிரதமராகும் அவரது முடிவை எதிர்த்து 11 நாட்கள் தொடர்ந்த போராட்டங்களுக்குப் பிறகு, பதவி விலக அவர் முடிவெடுத்தார்.

அவர் ஏற்கனவே ஆர்மீனியாவின் அதிபராக இருமுறை பதவி வகித்தார். துணைப் பிரதமரும் சார்கிஸ்யான் கூட்டாளியுமான கரேன் கராபெட்யான் (Karen Karapetyan) பிரதமராக பதவியேற்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது

Leave a Reply