shadow

எகிப்து நாட்டில் 5000 ஆண்டுகளுக்கு முந்தைய பழமையான நகரம் கண்டுபிடிப்பு

3உலகின் பழமையான நாடுகளில் ஒன்றாகிய எகிப்து நாட்டில் 5000 ஆண்டுகளுக்கு முன் இருந்த பழமையான ஒரு நகரத்தை அந்நாட்டு தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். இந்த நகரம் நவீன முறையில் திட்டமிட்டு இருந்ததாகவும், 5000 ஆண்டுகளுக்கு முன்பே அப்பகுதி மக்கள் மிகத்திறமையானவர்களாக இருந்துள்ளனர் என்பதும் தெரிய வந்துள்ளது.

அந்த நகரம் வீடுகள், கருவிகள், மண்பானைகள், மிகப்பெரிய அளவிலான கல்லறைகள் போன்றவற்றை கொண்டுள்ளன. இந்த நகரம் நைல் நதிக்கும் அபிடாஸ் நகரத்துக்கும் அருகே கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இந்த நகரத்தில் அதிகாரிகளும், கல்லறை கட்டுமான கலைஞர்களும் வாழ்ந்திருக்கலாம் என்றும் பழைய எகிப்து நாட்டின் தலைநகரமான அபிடாஸ் நகரத்தில் அரச குடும்பத்துக்கு கல்லறை கட்டுகிற பணியில் அவர்கள் இருந்திருக்கலாம் எனவும் கூறுகின்றனர்.

இந்த பழமையான நகரத்தை பார்க்க எகிப்து நாட்டிற்கு சுற்றுலாப்பயணிகள் மிகுந்த ஆர்வம் கொண்டுள்ளதாகவும், அடுத்த சில நாட்களில் அப்பகுதியில் பெருமளவில் சுற்றுலா பயணிகள் குவிய வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது.

Leave a Reply