ரஜினி நடிக்க வேண்டிய படத்தில் அரவிந்தசாமி?

கேரள சூப்பர் ஸ்டார் மம்முட்டி, நயன்தாரா நடிப்பில் கடந்த ஆண்டு வெளிவந்த ‘பாஸ்கர் தி ராஸ்கல்’ திரைப்படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது. இந்த படத்தின் இயக்குனர் சித்திக், இந்த படத்தின் தமிழ் ரீமேக்கில் மம்முட்டி கேரக்டரில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்க வேண்டும் என்று தன்னுடைய விருப்பத்தை சில மாதங்களுக்கு முன் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் தற்போது இந்த படம் தமிழில் ரீமேக் செய்யப்படவுள்ளதாகவும், மம்முட்டி கேரக்டரில் அரவிந்தசாமி நடிக்கவுள்ளதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளது. இந்த படத்தை மலையாளத்தில் இயக்கிய சித்திக் தமிழிலும் இயக்கவுள்ளார்.

இந்த படத்தின் மற்ற நடிகர், நடிகையர் தேர்வு நடைபெற்று வருவதாகவும், விரைவில் இந்த படம் குறித்த அறிவிப்புகள் வெளிவரும் என்றும் கூறப்படுகிறது.

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *