shadow

டெல்லி முதல்வரின் ஸ்நாக்ஸ் செலவுகள் மட்டும் ரூ.1 கோடிக்கும் மேல்?

மக்களின் முதல்வர், மக்களோடு மக்களாக பணிபுரியும் முதல்வர், ஊழல் கறை படியாதவர் என்று பெயரெடுத்த டெல்லி முதல்வரின் ஸ்நாக்ஸ் செலவு மட்டும் ரூ.1 கோடி என்று தகவல் அறியும் சட்டத்தின் மூலம் தெரிய வந்துள்ளது

டெல்லியை சேர்ந்த விவேக் என்பவர் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் அடிப்படையில் டெல்லி முதல்வரின் செலவுகள் குறித்து கேட்ட கேள்விகளின் மூலம் இந்த உண்மை தெரிய வந்துள்ளது.

அரவிந்த் கெஜ்ரிவாலின் வீட்டிற்கு வரும் விருந்தாளிகளுக்கு ஸ்நாக்ஸ் வாங்க ரூ.28.60 லட்சமும், அவருடைய அலுவலகமான டெல்லி தலைமைச் செயலகத்தில் விருந்தினர்களுக்கு டீ, ஸ்னாக்ஸ் வழங்க  ரூ.27.25 லட்சமும் செலவாகியுள்ளது.  

கடந்த 2015-ம் ஆண்டு பிப்ரவரி மாதத்தில் இருந்து ஆகஸ்ட் 2016-ம் ஆண்டு வரைக்கான செலவுதான் இது. டெல்லி மாநில துணை முதல்வர் மணீஷ் சிசோடியா, டீ ஸ்னாக்ஸ் செலவாக  ரூ.15 லட்சம் செலவு செய்துள்ளார். இப்படி டெல்லி அமைச்சர்களின் டீ,ஸ்னாக்ஸ் செலவு ஒரு கோடியைத் தாண்டியுள்ளது.

டெல்லி முதல்வர் பங்களாவின்  மின்சாரச் செலவும் அதேபோல் ஆச்சரியத்தை அளிக்கின்றது. கடந்த 2015-ம் ஆண்டு மார்ச் 19-ம் தேதியில் இருந்து 2016-ம் ஆண்டு செப்டம்பர் 4-ம் தேதி வரை ரூ.2.23 லட்சம் கட்டணம் செலுத்தப்பட்டுள்ளது. டெல்லி மாநில அமைச்சர்களிலேயே அதிக மின்சாரம் செலவழிக்கும் அமைச்சர்… அந்தமாநில மின்துறை அமைச்சர் சத்யேந்தர் ஜெயின்தான். இவரது வீட்டு மின்சார செலவு ரூ. 3.99 லட்சம்.

Leave a Reply