shadow
9 நாள் தர்ணா போராட்டத்தை திடீரென கைவிட்ட அரவிந்த் கெஜ்ரிவால்
டெல்லி துணைநிலை ஆளுநா் அலுவலகத்தில் கடந்த 9 தினங்களாக தா்ணாவில் ஈடுபட்டு வந்த முதல்வா் அரவிந்த் கெஜ்ரிவால் தனது போராட்டத்தை திடீரென கைவிட்டுள்ளார். டெல்லி உயர்நீதிமன்றத்தின் கண்டனத்தை அடுத்தே அவர் தனது போராட்டத்தை நிறுத்திவிட்டதாக கூறப்படுகிறாது.
டெல்லியில் ஐ.ஏ.எஸ். அதிகாாிகளின் பகுதி நேர வேலை நிறுத்த போராட்டத்தை முடிவுக்கு கொண்டுவர வலியுறுத்தியும், ரேஷன் பொருள்களை பயனாளிகளின் வீடுகளுக்கே கொண்டு சோ்க்கும் திட்டத்திற்கு ஒப்புதல் வழங்க கோரியும் அம்மாநில முதல்வா் அரவிந்த் கெஜ்ரிவால் துணைநிலை ஆளுநர் அலுவலகத்தில் கடந்த 9 நாள்களாக தா்ணா போராட்டத்தில் ஈடுபட்டார் 
இந்த போராட்டம் குறித்த வழக்கு சமீபத்தில் டெல்லி உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தபோது ஆளுனர் வீட்டிலும் அலுவலகத்திலும் போராட்டம் செய்ய யார் அனுமதி கொடுத்தது? என்று கண்டனம் தெரிவித்தனர்.
இந்நிலையில் போராட்டத்தை கைவிடுமாறு துணைநிலை ஆளுநா் அணில் பைஜால் கேட்டுக்கொண்டதை அடுத்த் அரவிந்த் கெஜ்ரிவால் தனது போராட்டத்தை கைவிட்டுள்ளதாகவும், வேலை நிறுத்தத்தில் ஈடுபடும் ஐ.ஏ.எஸ். அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்த அவர் முடிவு செய்துள்ளதாகவும் தெரிகிறது.

Leave a Reply