shadow

aranmanaiசித்ரா லட்சுமணன்,கோவை சரளா, வினய் ஆகிய மூவரும் ஜமின் பரம்பரையை சேர்ந்தவர்கள். இவர்களுக்கு சொந்தமான ஒரு அரண்மனையை மூவரும் சேர்ந்து விற்க முயற்சி செய்கின்றனர். எனவே மூவரும் தங்கள் குடுமத்துடன் இந்த அரண்மனையில் தங்க முடிவு செய்கின்றனர்.

வினய் தனது மனைவி ஆண்ட்ரியாவுடனும், கோவை சரளா தனது கணவர் மனோபாலா மற்றும் மகன் நிதின் சத்யாவுடனும், சித்ரா லட்சுமிமணன் தனது மகள் ராய்லட்சுமியுடன் இந்த அரண்மனைக்கு வருகின்றனர். இந்நிலையில் தனக்கும் இந்த அரண்மனையில் உரிமை உண்டு என சந்தானமும் இந்த அரண்மனையில் வந்து தங்குகிறார்.

அரண்மனையில் ஒரு பேய் உலாவுகிறது என்பது இதில் தங்கியிருக்கும் அனைவரும் உணர்கின்றனர். அந்த பேய் ஆண்ட்ரியாவின் மீது அடிக்கடி வருவதாக இந்த அரண்மனைக்கு வரும் வக்கீலான சுந்தர் சி கண்டுபிடிக்கிறார். இவர் ஆண்ட்ரியாவின் அண்ணன் என்பது குறிப்பிடத்தக்கது.

ஆண்ட்ரியாவின் மீது வரும் பேய் யார்? எதற்காக வருகிறது. அதை எப்படி விரட்டியடிப்பது என்பதை காமெடி கலந்து த்ரில்லராக கொடுத்துள்ளார் சுந்தர் சி. ஆண்ட்ரியா மீது வரும் பேய் ஹன்சிகாதான் என்பது தெரிந்தவுடன் படம் ஜெட் வேகத்தில் பறக்கின்றது.

ஆண்ட்ரியாவின் அண்ணனாக அரண்மனையில் நுழையும் சுந்தர் சி, சந்திரமுகியின் ரஜினியை அடிக்கடி ஞாபகப்படுத்துகிறார். ஆனாலும் சுந்தர் சியிடம் ஒரு பக்குவப்பட்ட நடிப்பு தெரிகிறது.

வினய்யை யாரும் இந்த படத்தில் கண்டுகொள்ளவே இல்லை. படம் முழுவதும் ஹன்சிகா, ஆண்ட்ரியா, லட்சுமி ராய் என நடிகைகளின் ராஜ்ஜியம்தான்.

படத்தில் சந்தானம் எண்ட்ரி ஆன பின்னர் காமெடி களைகட்டுகிறது. இடையிடையே த்ரில்லிங் காட்சிகள் வந்து ரசிகர்களை பயமுறுத்துகிறது. கிராபிக்ஸ் காட்சிகளில் சுந்தர் சி கவனம் செலுத்தியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

பரத்வாஜ் இசையில் பாடல்கள் சுமாராக இருந்தாலும், பின்னணி இசை சிறப்பாக உள்ளது. த்ரில்லிங் படத்திற்கேற்ற செந்தில் குமாரின் ஒளிப்பதிவு சூப்பர்.

சந்திரமுகி, அருந்ததி, முனி, யாமிருக்க பயமே போன்ற படங்களை அடிக்கடி அரண்மனை ஞாபகப்படுத்தினாலும், சுந்தர் சியின் வழக்கமான காமெடி கலாட்டாவிற்காக ஒருமுறை கண்டிப்பாக பார்க்கலாம்.

Leave a Reply