shadow

nanaukcycloneஅரபுக்கடலில் புதிய புயல்சின்னம் தோன்றியுள்ளதால் கேரள, மகாராஷ்டிரா மற்றும் கர்நாடகா ஆகிய மூன்று மாநிலங்களுக்கும் இந்திய வானியல் ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

நேற்று பிற்பகல் அரபிக் கடலின் கிழக்கு பகுதியில் புதிய  காற்றழுத்தத் தாழ்வு நிலை உருவாகி, அது வடக்கு, வட மேற்காக நகர்ந்து தீவிர காற்றழுத்தத் தாழ்வு நிலையாக மாறி, புயலாக உருவெடுத்துள்ளது.  இந்த புதிய புயல் சின்னத்திற்கு ‘நானவுக்’ என்று பெயரிடப்பட்டுள்ளது.

‘நானவுக்’ புயல் மும்பையில் இருந்து  670 கிமீ தொலைவில் மேற்கு மற்றும் தென்மேற்கு திசையில் நகர்ந்து அடுத்த 24 மணி நேரத்தில் மேற்கு கடற்கரையில் உள்ள மூன்று மாநிலங்களையும் தாக்கக்கூடும் என எச்சரிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக அடுத்த 24 மணி நேரத்தில் மகாராஷ்ட்ரா, கர்நாடகா மற்றும் கேரளாவின் கடலோரப் பகுதிகளில் பலத்த மழை பெய்யும் என இந்திய வானியல் மையம் எச்சரிக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி  மணிக்கு 80 முதல் 100 கிலோ மீட்டர் வேகத்தில் பலத்த சூறைக்காற்று வீசக்கூடும் என்று கூறப்படுகிறது. இந்த நானவுக் புயல் ஓமன் நாட்டை நோக்கி நகரும் என கணிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply