shadow

அஜித்தால் அப்புக்குட்டிக்கு கிடைத்த முதல் வெளிநாட்டு பயணம்

appukuttyசுசீந்திரன் இயக்கிய வெண்ணிலா கபடிக்குழு, ‘அழகர்சாமியின் குதிரை’ உள்பட ஒருசில படங்களில் நடித்த நடிகர் அப்புக்குட்டி சிறந்த துணை நடிகருக்கான தேசிய விருது பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது. அதுமட்டுமின்றி அப்புக்குட்டி, தல அஜித் நடித்த ‘வீரம்’ மற்றும் ‘வேதாளம்’ ஆகிய படங்களில் நடித்துள்ளதோடு அஜித், அப்புக்குட்டியாக போட்டோஷூட்டிங் ஒன்றையும் தனது சொந்த செலவில் நடத்தியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் அஜித் தற்போது நடித்து வரும் ‘அஜித் 57’ படத்தில் ஒரு முக்கிய கேரக்டரில் நடிக்கவுள்ளதாக செய்திகள் வெளிவந்தது. தற்போது வெளிநாட்டு படப்பிடிப்பில் இருக்கும் ‘தல 57’ குழுவினர் சென்னை திரும்பியதும் அஜித்-அப்புக்குட்டி சம்பந்தப்பட்ட காட்சிகள் படமாக்கப்படும் என படக்குழுவினர் தெரிவித்திருந்தனர்.

ஆனால் தற்போது இதில் ஒரு சிறு மாற்றம் ஏற்பட்டுள்ளது. அஜித்-அப்புக்குட்டியின் காட்சிகள் அமெரிக்காவில் படமாக்கப்படவுள்ளதாகவும் இதற்காக அப்புக்குட்டி விரைவில் அமெரிக்கா செல்லவுள்ளதாகவும் கூறப்படுகிறது. படப்பிடிப்பிற்காக வெளிநாட்டுக்கு அப்புக்குட்டி செல்வது இதுவே முதல்முறை என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply