shadow

shadow

செல்போன்கள் அடிக்கடி திடீரென வெடித்து சிதறும் சம்பவங்கள் ஆங்காங்கே நடந்து கொண்டிருக்கும் நிலையில் இன்று காலை ஹரியானா மாநிலத்தில் உணவக உரிமையாளரின் ஆப்பிள் ஐபோன் 6 வெடித்து சிதறியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இது குறித்து ஹரியானா போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

ஹரியானா மாநிலத்தை சேர்ந்த குர்கான் என்ற பகுதியில் உணவகம் வைத்திருக்கும் கிஷன் என்பவர் தனது காரில் சென்று கொண்டிருந்தபோது தனது ஐபோனில் 6 ஐ எடுத்து பேசியுள்ளார். அவர் மும்முரமாக பிசினஸ் குறித்து பேசிக்கொண்டிருக்கும்போது திடீரென போனில் இருந்து தீப்பொறி வந்தது. உடனே சுதாரித்து கொண்ட கிஷன் தனது கையில் இருந்த ஐபோனை வெளியில் தூக்கி எறிந்தார். அவர் அந்த போனை எறிந்த  அடுத்த சில வினாடிகளிலேயே அந்த போன் வெடித்து சிதறியுள்ளது.

இருப்பினும் ஐபோனில் இருந்து வெளிப்பட்ட தீப்பொறியால் கிஷனின்  கட்டை விரலில் தீக்காயமும் ஏற்பட்டுள்ளது. இதனை அடுத்து  வழக்கு பதிவு செய்துள்ள காவல்துறையினர்,  தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

இந்தியாவில் ஐபோன் 6 வெடித்து சிதறுவது இதுவே முதல் முறை. இந்த சம்பவம் தொடர்பாக ஆப்பிள் நிறுவனமும் விசாரனை மேற்கொண்டு வருகிறது. 52 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள ஐபோன் 6, இந்தியாவில் வெடிப்பது இதுதான் முதல்முறை என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply