shadow

ஆப்பிள் நிறுவனத்துடன் இணைந்து அதிவேக ரயிலை இயக்க ரயில்வே துறை முடிவு

ஆப்பிள் நிறுவனத்துடன் உதவியுடன் மணிக்கு 600 கி.மீ. வேகத்தில் ரயில்களை இயக்குவது பற்றி ஆலோசித்து வருவதாக மத்திய ரயில்வே அமைச்சர் சுரேஷ்பிரபு கூறியுள்ளார்.

டெல்லியில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற தொழில் வர்த்தக சபை கூட்டத்தில் கலந்துகொண்ட மத்திய ரயில்வே அமைச்சர் சுரேஷ்பிரபு, நாடு முழுவதும் ரயில் சேவையின் வேகத்தை அதிகரித்து, பயணத்தின் நேரத்தைக் குறைக்க மத்திய அரசு முயற்சிகள் மேற்கொண்டு வருகிறது என்று தெரிவித்தார். இதற்காக ரூ.18 ஆயிரம் கோடி மதிப்பில் திட்டமிடப்பட்டு மத்திய அரசின் ஒப்பதல் பெறப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.

முதலில், டெல்லி – மும்பை மற்றும் டெல்லி – கோல்கட்டா ஆகிய வழித்தடங்களில் இந்த மிகை வேக விரைவு ரயில்கள் இயக்கப்படும். ஆரம்பக்கட்டமாக, மணிக்கு 200கி.மீ. வேகத்தில் குறிப்பிட்ட ரயில்களை இயக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார். படிப்படியாக, மணிக்கு 600 கி.மீ. வேகத்தில் ரயில்களை இயக்குவது குறித்தும் ஆலோசித்து வருவதாக அவர் குறிப்பிட்டிருக்கிறார்.

இது தொடர்பாக ஆப்பிள் நிறுவனத்துடன் கைகோர்க்க அரசு தரப்பில் பேச்சுவார்த்தை நடத்து வருகிறது. ரயில்களின் வேகம் கூடும் அதே சமயத்தில் பயணிகளின் பாதுகாப்பிலும் கூடுதல் கவனம் செலுத்தப்படும் என்றும் அமைச்சர் திட்டவட்டமாகத் தெரிவித்தார்.

Leave a Reply