shadow

ஜெயலலிதா சிகிச்சை பெற்ற போது சிசிடிவி காட்சிகள் என்ன ஆயிற்று: பிரதாப் ரெட்டி தகவல்

முன்னாள் முதல்வர் கடந்த 2016ஆம் ஆண்டு அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தபோது அவருடைய அறை உள்பட அந்த பகுதியில் இருந்து சிசிடிவி காட்சிகள் என்ன ஆயிற்று என்று பல்வேறு தரப்பினர் கேள்வி எழுப்பி வந்த நிலையில் ஜெயலலிதா சிகிச்சை பெற்ற பகுதியில் இருந்த அனைத்து சி.சி.டி.வி கேமராக்களை நிறுத்தி வைத்திருந்தோம் என அம்மருத்துவமனை குழும தலைவர் பிரதாப் ரெட்டி பேட்டியில் கூறியுள்ளார். இதுகுறித்து அவர் மேலும் கூறியதாவது:

முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு சிகிச்சை தருவதில் சிறப்பு கவனம் செலுத்தப்பட்டது. அவருக்கு அப்பல்லோ மருத்துவர்களை தவிர வெளிநாட்டிலிருந்தும் மருத்துவர்கள் அழைத்து வரப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டது.

மேலும், ஜெயலலிதாவின் உடல்நலம் தேறி வருவதாக நாங்கள் நினைத்தோம். அவரது உடல்நலத்தில் முன்னேற்றம் ஏற்படுவதற்கான அத்தனை சிகிச்சைகளையும் அப்பல்லோ மருத்துவர்கள் தொடர்ச்சியாக செய்து வந்தனர். அவருக்கு ஒரு நாள் அல்ல, பல வாரங்கள் எங்களால் முடிந்த அளவிற்கு சிகிச்சை அளித்தோம்.

மருத்துவமனையில் ஜெயலலிதாவை சந்திக்க குறிப்பிட்ட நபர்கள் மட்டுமே அனுமதிக்கப்பட்டனர். யாரெல்லாம் சந்திக்க வேண்டும் என்பதை ஜெயலலிதா உடன் இருந்தவர்கள் முடிவு செய்தனர். ஜெயலலிதாவிற்கு சிகிச்சை அளிக்கப்பட்ட பகுதியில் உள்ள சிசிடிவி கேமராக்கள் நிறுத்தி வைக்கப்பட்டன. சிசிடிவி காட்சிகளை சம்பந்தமில்லாதவர்கள் பார்க்க நேரிடும் என்பதால் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டது.

ஜெயலலிதாவுக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை குறித்த எல்லா தகவலையும், ஆவணங்களையும் விசாரணை ஆணையத்தில் கொடுத்துள்ளோம்.

இவ்வாறு பிரதாப் ரெட்டி கூறினார்.

Apollo pradap reddy says cctv stopped in jayalalitha treatment areas

Leave a Reply