shadow

andra capitalஒருங்கிணைந்த ஆந்திரப்பிரதேசத்தில் இருந்து தெலுங்கானா பிரிந்த பின்னர் ஆந்திராவுக்கென ஒரு புதிய தலைநகரை விஜயவாடா அருகே அமைக்க ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருவதாக முதல்– மந்திரி சந்திரபாபு நாயுடு அறிவித்து இருந்தார். அதுமட்டுமின்றி 44 மாடிகளில் புதிய தலைமைச்செயலகம் ஒன்றும் கட்டப்படும் என்று அவர் தெரிவித்துள்ளார்.

சிங்கப்பூர், ஜப்பான் நாடுகளின் தொழில்நுட்ப உதவியுடன் நவநாகரீகமாக புதிய தலைநகர் அமையும் என்றும், இதற்காக அந்நாட்டு நிறுவனங்களுடன் ஒப்பந்தம் விரைவில் செய்ய உள்ளதாகவும் ஆந்திர மாநில முதல்வர் சந்திரபாபு நாயுடு கூறியுள்ளார். இதற்கான அடிக்கல் நாட்டு விழா வரும் 2015ஆம் ஆண்டு ஜூன் 2ஆம் தேதி நடைபெறும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

ஜூன் 2–ந்தேதி ஆந்திரா உதய தினம் கொண்டாடப்படுவதால் அன்றைய தினத்தில் அல்லது யுகாதி தினத்தில் அடிக்கல் நாட்டு விழா நடைபெறும் என கூறப்படுகிறாது.

சுற்றுலா பயணிகளை ஈர்க்கும் வகையில் தலைமைச்செயலகம் அமைய வேண்டும் என்பதில் முதல்வர் தீவிரமாக உள்ளதாகவும், முதல்– அமைச்சர் இல்லம் மற்றும் அதிகாரிகள் குடியிருப்புகள் விஜயவாடாவில் மாற்றப்பட உள்ளதாகவும் ஆந்திர மாநில அரசு அதிகாரிகள் தெரிவித்தனர். ஜூன் மாதத்துக்குள் நிலம் கையகப்படுத்தப்பட்டு விடும் என்றும் நகரை வடிவமைக்க ஜப்பான் நிறுவனம் முன்வந்து உள்ளது என்றும் கூறப்படுகிறது.

Leave a Reply