shadow

anushkaஅருந்ததி, வேட்டைக்காரன், லிங்கா உள்பட பல படங்களில் நடித்த முன்னணி நடிகை அனுஷ்கா. இவர் தற்போது பாகுபாலி’ என்ற பிரமாண்டமான படத்தில் நடித்து வருகிறார்.

பிரபாஸ், அனுஷ்கா, தமன்னா உள்பட பலர் நடித்துள்ள இந்த படத்தை ‘நான் ஈ இயக்குனர் எஸ்.எஸ்.ராஜமவுலி இயக்கி வருகிறார். இந்நிலையில் இந்த படத்தின் ரீ ரிக்கார்டிங் நடைபெறும்போது படத்தின் 12 நிமிட காட்சிகளை மர்ம நபர் ஒருவர் திருடி இணையத்தில் பதிவு செய்துவிட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

இதையடுத்து படத்தயாரிப்பாளர் செய்த புகாரின் அடிப்படையில் நடவடிக்கை எடுத்த போலீஸார், திருட்டுத்தனமாக இணையத்தில் வெளியிட்ட மர்ம நபரை கைது செய்தனர். ரூ.165 கோடியில் இரண்டு ஆண்டுகளுக்கும் மேல் பிரமாண்டமாக தயாரிக்கப்பட்டு வரும் இந்த படத்தின் 12 நிமிடக்காட்சிகள் இணையத்தில் வெளிவந்ததால் படக்குழுவினர் பெரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். அந்த 12 நிமிடக்காட்சிகளில் பெரும்பாலும் அனுஷ்கா நடித்த காட்சி இருப்பதாகவும் கூறப்படுகிறது.

இணையத்தில் லீக் ஆன இந்த வீடியோவை எந்த ஊடகமும் வெளியிடக்கூடாது என்று சைபர் க்ரைம் போலீஸார் எச்சரிக்கை செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

[embedplusvideo height=”400″ width=”600″ editlink=”//bit.ly/1ByETad” standard=”//www.youtube.com/v/9KJmEVSCwFU?fs=1″ vars=”ytid=9KJmEVSCwFU&width=600&height=400&start=&stop=&rs=w&hd=0&autoplay=0&react=1&chapters=&notes=” id=”ep4981″ /]

Leave a Reply