அனுஷ்காவுடன் இணையும் தமன்னா, ஹன்சிகா, ஸ்ரீதிவ்யா, காஜல் அகர்வால்

anushkaaஅனுஷ்கா நடித்த ‘பாகுபலி’, ருத்ரம்மாதேவி படங்களை அடுத்து விரைவில் வெளிவரவுள்ள திரைப்படம் ‘இஞ்சி இடுப்பழகி. ஆர்யா நாயகனாக நடித்துள்ள இந்த படத்தில் ஏற்கனவே நாகார்ஜுனா, ஜீவா, ஹன்சிகா ஆகியோர் சிறப்பு வேடத்தில் நடித்திருக்கும் நிலையில் தற்போது தமன்னா, காஜல் அகர்வால், ஹன்சிகா, ஸ்ரீதிவ்யா, ஆகிய முன்னணி நடிகைகளும், பாபிசிம்ஹா, ராணா ஆகிய முன்னணி நடிகர்களும், சிறப்பு தோற்றத்தில் நடித்துள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது.

மேலும் பழம்பெரும் நடிகையான ரேவதி ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் இந்த படத்தில் நடித்துள்ளார். அனுஷ்காவுக்கு அழகுக்கலையை சொல்லிக்கொடுக்கும் நிபுணராக ரேவதி இந்த படத்தில் நடித்துள்ளாராம்

ஒரே படத்தில் முன்னணி நடிகர்கள் மற்றும் நடிகைகள் இந்த படத்தில் நடித்துள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளதால் இந்த படத்தின் எதிர்பார்ப்பு பன்மடங்கு பெருகியுள்ளதாகவும், தமிழ், மற்றும் தெலுங்கில் இந்த படத்தை ரிலீஸ் செய்ய விநியோகிஸ்தர்கள் ஆர்வத்துடன் முன்வருவதாகவும் கூறப்படுகிறது.

English Summary: Anushka, Sridivya, Tamannah, Kajal Aggarwal and Hansika in same film

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *