சூர்யாவுடன் நடிக்க அனுஷ்கா போட்ட கண்டிஷன்: அதிர்ச்சியில் தயாரிப்பாளர்!

சூர்யா நடித்த என்ஜிகே மற்றும் காப்பான் ஆகிய இரண்டு திரைப்படங்கள் இந்த ஆண்டு வெளியான நிலையில் தற்போது அவர் நடித்து முடித்துள்ள சூரரைப்போற்று என்ற திரைப்படமும் ரிலீசுக்கு தயாராகி வருகிறது. இந்த நிலையில் அவர் அடுத்ததாக இயக்குனர் ஹரி இயக்கத்தில் ஒரு திரைப்படத்திலும் வெற்றிமாறன் இயக்கத்தில் ஒரு படத்திலும் கௌதம் மேனன் இயக்கும் திரைப்படத்தில் நடிக்க இருப்பதாக செய்திகள் வெளிவந்து கொண்டிருக்கின்றன

இயக்குனர் ஹரி இயக்கத்தில் சூர்யா நடிக்கும் திரைப்படத்தின் ஆரம்ப கட்ட பணிகள் தொடங்கி விட்டதாகவும் வரும் டிசம்பர் முதல் இந்த படத்தின் படப்பிடிப்பு தொடங்கும் என்றும் கூறப்படுகிறது. இந்த நிலையில் ஹரி மற்றும் சூர்யா மீண்டும் இணையும் படத்தில் சூர்யா ஜோடியாக அனுஷ்காவை நடிக்க வைக்க இயக்குனர் தரப்பில் இருந்து பேச்சுவார்த்தை நடத்தப் பட்டதாகவும் அதற்கு அனுஷ்கா கேட்ட சம்பளம் தயாரிப்பாளரை அதிர்ச்சியடைய வைத்ததாகவும் கூறப்படுகிறது

இந்த படத்தில் நடிக்க அனுஷ்கா ரூ.15 கோடி சம்பளம் கேட்டதாகவும் இதனால் தயாரிப்பாளர் அதிர்ச்சி அடைந்து வேறு நாயகியை ஒப்பந்தம் செய்ய முடிவு செய்திருப்பதாக கூறப்படுகிறது. சூர்யாவுடன் நடிப்பதை தவிர்ப்பதற்காகவே வேண்டுமென்றே அவர் அதிக சம்பளம் கேட்பதாக ஒரு வதந்தி கூறப்பட்டு வருகிறது. முன்னதாக சிங்கம் படத்தின் மூன்று பாகங்களிலும் சூர்யாவுக்கு ஜோடியாக அனுஷ்கா நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது

Leave a Reply