நீண்ட இடைவேளைக்கு பின்னர் எஸ்.ஜே.சூர்யா நடித்து இயக்கி வரும் திரைப்படம் “இசை”. இந்த படத்தில் அவர் இசையமைப்பாளராகவும் அறிமுகம் ஆகிறார். இந்த படத்தின் எடிட்டிங் பணிகளை முடித்த எடிட்டர் அந்தோணி “இசை” குறித்து தன்னுடைய கருத்தை நேற்று பத்திரிகையாளர்களிடம் தெரிவித்தார்.

எஸ்.ஜே.சூர்யாவின் முந்தைய படங்களான ‘நியூ’ மற்றும் ‘அன்பே ஆருயிரே’ படங்களை விட ‘இசை’ சிறப்பாக வந்துள்ளதாகவும், அதில் நடித்துள்ள சூர்யா, சத்யராஜ் மற்றும் கஞ்சா கருப்பு ஆகியோர்களின் நடிப்பு கண்டிப்பாக திரையுலகில் பரபரப்பாக பேசப்படும் என்றும் கூறியுள்ளார்.

எஸ்.ஜே.சூர்யாவுக்கு ஜோடியாக சாவித்ரி என்ற புதுமுக நடிகை அறிமுகம் ஆகியுள்ளார். இந்த திரைப்படம் அஜீத்தின் பிறந்த நாளான மே 1ஆம் தேதி வெளிவருகிறது. சூர்யா இயக்கிய ‘வாலி’ படத்தில் நடித்ததில் இருந்து சூர்யாவும், அஜீத்தும் சிறந்த நண்பர்கள் என்பது கோலிவுட் அறிந்ததே.

Leave a Reply