வங்கியில் கடன் வாங்கி ரூ.6 ஆயிரம் கோடி மோசடி செய்த மேலும் ஒரு தொழிலதிபர்

விஜய் மல்லையா, நீரவ் மோடியை தொடர்ந்து சென்னையை சேர்ந்த நகை நிறுவனம் ஒன்றும் பலகோடி வங்கியில் கடன் வாங்கி மோசடி செய்த தகவல்கள் வந்து கொண்டிருக்கின்றன. இந்த நிலையில் இமாச்சலபிரதேச மாநிலத்தில் வங்கி கடன், வரி ஏய்ப்பு, மின் கட்டண பாக்கி மூலம் ரூ.6 ஆயிரம் கோடி மோசடி செய்த தொழில் அதிபர் ஒருவரை போலீசார் கைது செய்துள்ளனர்.

இமாசலபிரதேச மாநிலத்தில் இந்தியன் டெக்னோமேக் என்னும் நிறுவனத்தை ஐ.ஏ.எஸ். அதிகாரி. எம்.எல்.சர்மா என்பவரின் மகன் வினய்குமார் சர்மா என்பவர் நடத்தி வந்தார். இந்த நிறுவனம் மூலம் பல்வேறு விதமான தொழில்நுட்ப கருவிகள் தயாரிக்கப்படுவதற்காக வினய் குமார் சர்மா பல்வேறு வங்கிகளில் 2,167 கோடி ரூபாய் கடன் வாங்கினார். ஆனால் அந்த பணத்தை அவர் திரும்ப செலுத்தவில்லை.

இந்த நிலையில் அவர் தனது ஊழியர்களுக்கு ஒழுங்காக மாத சம்பளம் கொடுப்பதில்லை என்ற புகார் எழுந்தது. மேலும் அவர் மின் கட்டண பாக்கி வைத்திருப்பதாகவும் கூறப்பட்டது. இதையடுத்து கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு அவரது நிறுவனத்தில் வருமான வரித்துறையினர் அதிரடி சோதனை நடத்தினார்கள். அப்போது வினய்குமார் சர்மா ரூ.2,175 கோடி அளவுக்கு வரி ஏய்ப்பு செய்திருப்பது தெரிய வந்தது. அவர் மீது நடவடிக்கை எடுக்க இமாச்சலபிரதேச அரசு உத்தரவிட்டது. இதை யடுத்து வினய்குமார் சர்மா தனது தொழிற்சாலையை மூடி விட்டு தலைமறைவாகி விட்டார்.

இந்த நிலையில் நேற்று அவர் போலீசாரிடம் சிக்கினார். அவரை போலீசார் பாண்டா சாகிப் நகர கோர்ட்டில் ஆஜர்படுத்தினார்கள். 24-ந்தேதி வரை அவரை காவலில் வைக்க கோர்ட்டு உத்தரவிட்டது. அவரை போலீசார் காவலில் எடுத்து விசாரிக்க முடிவு செய்துள்ளனர்

another bank loan fraud. Himachal pradesh businessman arrested

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *